HELPDESK : 7811877818 , 8300058840
DBCAS - TAMIL DEPARTMENT - PROFILE

வணக்கம். தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட முண்டாசு கவிஞன் பிறந்த எட்டையபுரத்திற்கு அருகில் உள்ள கீழஈரால் என்ற ஊரில், தொன் போஸ்கோவின் சலேசியர்களால் சீர்மிகு வழியில் நடத்தப்பட்டு வருவது தான் எமது தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி. சலேசியக் குருக்களின் ஆறாத் தமிழ்ப் பற்றால், 2016 2017 ஆம் கல்வியாண்டில் எமது கல்லூரின் செயலர் தந்தை அமலதாஸ் அடிகளார் அவர்களின் முயற்சியினாலும், முதல்வர் தந்தை முனைவர். அமல் ஜெய ராயன் அவர்களது வழிகாட்டுதலினாலும் தமிழ்த்துறையைக் கல்லூரியின் ஏழாவது பாடப்பிரிவாக இணைப்பது என்று திட்டமிடப்பட்டு 2017 - 2018 ஆம் கல்வியாண்டில் “தமிழ்த்துறை பாடப்பிரிவு" எமது கல்லூரியில் தோற்றுவிக்கப்பட்து.

தமிழ்த்துறை நோக்கம் எய்தும் இலட்சியப் போக்கு

ஏழை எளியவருக்கும், இளைஞர்களுக்கும் பணிபுரிய வேண்டும் என்கிற எமது சலேசியர்களின் கொள்கைகளுடன் நாகரிகம் என்ற பெயரில் நாகரிகமற்று சென்று கொண்டிருக்கும் எமது தமிழ்மொழியின் முதன்மைச் சிறப்பினை அறிந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும், எனது தாய்மொழியின் தொன்மையினை உலகமெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது எமது தமிழ்த்துறையின் நோக்கம். எமது நோக்கத்தை அடையும் எண்ணத்தில், மாணவர்களுக்கு இலக்கண பிழையின்றி எழுதவும், உச்சரிப்புத் தெளிவுப்பட பேசவும் கற்பிப்பதும், தூயத்தமிழில் புதியப் படைப்புகளை உருவாக்கும் எண்ணங்களைத் தூண்டி ஊக்குவிப்பதும். தமிழ்ச் சார்ந்த அனைத்து துறைகளிலும் எமது மாணவர்கள் முத்திரை பதிக்கும் வண்ணம் வழிகாட்டி அவர்களது வளம் நிறைந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுவதும் எனப் பல்வேறு வழிகளில் மாணாக்கர்களை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தி வருகின்றோம்.

தமிழ்த்துறை படிப்பின் பயன்பாடு


        
  • இளங்கலை தமிழ்த்துறை படிப்பதால் அரசுப்பணித் தேர்வு எழுதி வெற்றி பெறலாம். அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு பெறலாம்.

  •     
  • கவிதை / பேச்சாற்றல் போன்ற சிறப்பு திறன் பெறலாம்.

  •     
  • இளங்கலை தமிழ்த்துறை படிப்பதனால் முதுகலை,ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு கல்லூரி பேராசிரியராக பணிவாய்ப்பு பெறமுடியும்.


DON BOSCO COLLEGE OF ARTS AND SCIENCE
A CHRISTIAN MINORITY, CO-EDUCATIONAL, SELF-FINANCING COLLEGE
(Affiliated to Manonmaniam Sundaranar University-Tirunelveli)
KEELA ERAL, ETTAYAPURAM TK, THOOTHUKUDI DT-628908
TAMILNADU , INDIA.



7811877818, 8300058840, 8300058842, Landline : 04632- 290768

Mon - Sat, 8:00 AM - 4:00 PM

Staff Downloads

Teaching Staff App



principal@dbcas.edu.in

office@dbcas.edu.in


- 2023 Copyright is Reserved. Don Bosco College of Arts & Science, Keelaeral, Thoothukudi
- Design by Hungry Minds, India - 7985872766